Pages

Sunday, January 3, 2021

SDG Plant Whisper 2021

நான் எப்சிபா. யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் விவசாய பீட மாணவி. நிலையான அபிவிருத்தி இலக்கு (Sustainable Development Goals) என்ற சங்கத்துடன் இணைந்து (Plant Whisper) என்ற செயற்றிட்டத்தை செய்கின்றேன்.

இந்த சங்கமானது செப்டம்பர் 25, 2015 அன்று ஐக்கிய நாடுகள் பொது அவையிலுள்ள 193 நாடுகள் நமது உலகத்தை உருமாற்றுதல் (Transforming our World) என்ற தலைப்பிலான 2030  வளர்ச்சி செயல்நிரலுக்கு ஏற்பளித்தன.

இச்செயல் நிரலில் 17 குறிக்கோள்கள் அடங்கியுள்ளது.


இதில் 15வது குறிக்கோளான நிலத்தின் நிலைப்பாடான பயன்பாடு என்ற குறிக்கோளின் கீழ்  என்னுடைய செயற்திட்டமானது எடுத்து செய்யப்படுகின்றது

நில சூழலியல் அமைப்புகளை பாதுகாத்து, மீட்டமைத்து, அவற்றின் நீடித்த பயன்பாட்டை ஊக்குவித்தல், நீடிக்கத்தக்கவாறு காடுகளை நிலைப்பாடான முறையில் நிர்வகித்தல், பாலைவனமாதலுக்கு எதிராகப் போரிடல், நிலச் சீர்கேட்டைத் தடுத்து மீட்டமைத்தல், மற்றும் பல்லுயிர் இழப்பைத் தடுத்து நிறுத்துதல். இக் குறிக்கோளின் நோக்கமாகும்.


இதன் அடிப்படையில் 2021இற்குள் 365 ற்கும் மேற்பட்ட தாவர கன்றுகளை நாட்டி அவற்றை பராமரிப்பதே நாம் மேற்கொள்ளப்போகும் செயற்றிட்டமாகும்.


இக் காலகட்டத்தில் மரக்கன்றுகள், தாவரங்கள் நாட்டப்படுவது என்பது அனைவராலும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால்  அதை பராமரிக்கிறார்களா என்பது கேள்விக்குறியே??


2021 இற்குள்  365ற்கு மேற்பட்ட  மரக்கன்றுகளை நாட்டி அதை பராமரிப்பதே இச்செயற்றிட்டத்தின் பிரதான நோக்கமாகும்..

✔️யார் எங்களுடன் இணைந்து செயற்பட முடியும்??

ஆர்வமுள்ள அனைவரும் இத்திட்டத்தில் எங்களுடன் கைகோர்த்து உங்களுடைய பங்களிப்பை எங்களுக்கும் அழிந்து வரும் இயற்கையை காக்கவும் வழங்க முடியும்..

  

உங்களால் இச்செயற்றிட்டத்தை உலகின் எப்பகுதியில் இருந்தும் செயற்படுத்தி உங்களின் பங்களிப்பை வழங்க முடியும்


✔️நீங்கள் செய்ய வேண்டியது என்ன??

உங்களால் இயன்ற அளவு மரக்கன்றுகளை நாட்டி அவைகளை பராமரிப்பதே!

நாட்ட வேண்டிய கன்றுகளின் எண்ணிக்கை உங்களின் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யலாம்.

இத்திட்டத்தில் உங்களை பதிவு செய்ய விரும்பினால் கீழ்வரும் தகவல்களை பூர்த்தி செய்து +94710929645 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.

1.பெயர்

2.வதிவிடம்

3.தொலைபேசி இல

4.நாட்ட விரும்பும் கன்றுகளின் எண்ணிக்கை


இது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால். எங்களை தொடர்பு கொள்ளவும்.

+94710929645

Email- passara.sdgyc@gmail.com

Websites-

https://passarasdgyc.blogspot.com/?m=0

https://lankaplantwhisper.blogspot.com/?m=1

நீங்கள் செய்ய வேண்டிய மேலதிக தகவல்கள் பதிவின் பின் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்..

      நன்றி!!

No comments:

Post a Comment