Pages

Saturday, December 19, 2020

2021ற்குள் 365க்கும் மேற்பட்ட தாவர கன்றுகளை நாட்டி அவற்றை பராமரிப்பதே ஆகும்.

அனைவருக்கும் வணக்கம்

நமது குழுவில் இணைந்து எமது திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு உங்களுடைய விபரங்களை அனுப்பி பங்களிப்பு செய்த உங்கள் அனைவருக்கும் எமது குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றன்.

இத்திட்டத்தை செய்வதற்கான நோக்கம் 2021ற்குள் 365க்கும் மேற்பட்ட தாவர கன்றுகளை நாட்டி அவற்றை பராமரிப்பதே ஆகும்.
ஒருவர் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தாவர கன்றுகளை உங்கள் விருப்பத்தின் படி தெரிவு செய்யலாம்.

இதில் நீங்கள் தெரிவு செய்யும் கன்றானது ஒரு வருடம் அல்லது ஒன்றுக்கு மேல் ஆயுள் காலத்தை கொண்டதாகவும், ஒரு அடி அல்லது ஒரு அடிக்கு மேல் உயரமாக வளர கூடிய மரக்கன்று/செடி/கொடி அல்லது மூலிகை தாவரமாக  இருக்கலாம். அழிந்து வரும் தாவர இனங்களின் தெரிவு விரும்பதக்கது.

நீங்கள் தெரிவு செய்த தாவரத்தை இட வசதி உள்ளவர்கள் நேரடியாக நிலத்திலும், இடவசதி இல்லாதவர்கள் சாடிகள், மண்சட்டிகள் என உங்களின் வசதிற்கேற்ப கன்றுகளை நடலாம்.
 
கன்றுகளை நடும் போது புகைப்படம் (Photos) அல்லது வீடியோ (Video) ஒன்றை கட்டாயமாக அனுப்பி வைக்க தவற வேண்டாம்.
அனுப்ப வேண்டிய தொலைபேசி வட்சப் (Whats app) இல 
+94710929645

ஜனவரி 1ம் திகதி முதல் ஜனவரி 31ம் திகதிக்கு இடைப்பட்ட காலத்திற்குள் கன்றுகளை நாட்டி புகைப்படங்கள், விடியோவை அனுப்பி வைக்கவும்.

இத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக ஜனவரி முதலாம் திகதி வீடியோ ஒன்றை வெளியிட உள்ளதால் அதிலும் உங்கள் பங்களிப்பை வழங்க விரும்பினால் இம்மாதம் டிசம்பர் 24ம் திகதிக்கு முன்னர் தாவர கன்று ஒன்றை நாட்டி புகைப்படம் அல்லது வீடியோ ஒன்றைஅனுப்பி வைக்கவும்.

நன்றி

No comments:

Post a Comment